விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சங்கத்தமிழன் படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகவில்லை.
விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தையடுத்து இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சங்கத்தமிழன்.
ராக்ஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் இதில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
முன்னதாக தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் வெளியாகும் என படத்தை வெளியிடும் லிப்ரா புரொடக்ஷனின் ரவீந்தர் சந்திர சேகர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இறுதியாக இன்று இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அஜித்தின் வீரம் படத்தின்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இன்னும் விநியோகஸ்தர்களுக்கு
தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பணபாக்கி வைத்திருப்பதால் படத்தை வெளியிட சிக்கல் எற்பட்டுள்ளது.
எனினும் ஓரிரு நாட்களில் படத்தை திரைக்கு கொண்டுவர தொடர்ந்து பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது.