மைக்ரோமேக்ஸ் இன் பிராண்டில் நோட் 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய இன் பிராண்டில் நோட் 1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது.

6.67 புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

பின்புறம் கிரேடியன்ட் பினிஷ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி, ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே