நடிகர் தவசிக்கு நம்பிக்கையூட்டிய ரோபோ சங்கர்..!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு நடிகர் ரோபோ ஷங்கர் நேரில் சந்தித்து ஆறுதலையும் நிதியுதவியையும் அளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மெலிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கி இருக்கிறது.

நான் கடவுள், ஜில்லா, வீரம், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் தவசி.

கடந்த 2013 ஆம் ஆண்டு சிவக்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் அப்பாவாக தவசியின் ‘கருப்பன் குசும்புக்காரன்’ காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம். 

தற்போது, உணவுக்குழாய் புற்றுநோயோடு போராடும் தவசி தெற்கத்தி உடல்வாகும், முறுக்கிய மீசையுமாய் அந்த மண்ணுக்குரிய மொழியோடு திரையில் தோன்றுவது தமிழ் சினிமாவின் எல்லா ரசிகர்களுக்கும் பரிச்சயம்.

சமீப காலமாக உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவருக்கு இலவச சிகிச்சை அளித்து பேருதவி புரிந்திருக்கிறார்,

திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தது.

அதன்பிறகு, நடிகர்கள் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிடோர் உதவினார்கள். அவர்களையடுத்து, நடிகர் சிம்புவும் ஒரு லட்சம் நிதியுதவி அளித்தார்கள்.

தற்போது, ரோபோ ஷங்கர் தவசியை சந்தித்து “உங்கள் புகைப்படத்தைப் பார்த்தபோது கஷ்டமாக இருந்தது. மன உறுதியோடு இருங்கள். உங்கள் மீசையைப் பழையப்படி பார்க்கவேண்டும். ஐ ஆம் ஃபேக் சொல்லுங்க” என்று நம்பிக்கையூட்டியுள்ளது பாராட்டுக்களை குவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே