டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட். சொந்த நாட்டில் அவர் அடிக்கும் முதல் டெஸ்ட் சதம் இது. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்த சதத்தை பண்ட் விலகியுள்ளார்.
அசுர பார்மில் இருக்கும் பண்ட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சி வரும் பவுலர்களின் பந்தை மானாவாரியாக அடித்து நொறுக்கி வருகிறார்.
94 ரன்களை பண்ட் எடுத்திருந்த போது இங்கிலாந்து கேப்டன் ரூட் வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு சதம் விளாசியுள்ளார் பண்ட். 115 பந்துகளில் சதம் கடந்து பண்ட் கெத்து காட்டினார். இந்த அபாரமான இன்னிங்ஸின் மூலம் இந்திய அணியை இந்த டெஸ்ட் போட்டியில் முன்னிலை பெற செய்துள்ளார்.
இருப்பினும் அடுத்த சில பந்துகளில் ஆண்டர்சன் வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார் பண்ட். இந்திய அணி 89 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்துள்ளார். ஏற்கனவே ரோகித் சர்மா 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

