புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழிப் பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம்

புதிய கல்விக் கொள்கையில் விருப்பத் தேர்வான வெளிநாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை சமீபத்தில் வெளியிட்டது.

புதிய கல்விக் கொள்கையின்படி, பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட உள்ளது.

இதில் விருப்ப மொழித் தேர்வாக இந்திய மொழிகள் பலவும் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதேபோல் வெளிநாட்டு மொழிகளான கொரியன், ஜப்பான், தாய், பிரென்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், போர்த்துகீஸ், ரஷ்யன் மொழிகளும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவில், வெளிநாட்டு மொழிகள் பிரிவில் பட்டியலிடப்பட்டு இருந்த சீன மொழியான மாண்டரின், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் நீக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா – சீனா இடையே நிலவி வரும் பிரச்னை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சுமார் 100 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், விருப்ப மொழி பாடத்தில் இருந்து சீன மொழியான மாண்டரினும் நீக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே