கொரோனா தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பி உள்ள அறிக்கையில், நாளொன்றுக்கு ஒவ்வொரு அமர்வும் 100 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றும்; தடுப்பூசி போட்டவுடன் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை 30 நிமிடம் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் முன்கூட்டியே பதிவு செய்தவருக்கே தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், ஒரு மாவட்டத்துக்கு முடிந்தவரை ஒரே உற்பத்தியாளரின் தடுப்பூசியை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி எடுத்துச்செல்லும் கேரியர், குப்பிகள் மற்றும் தடுப்பூசியை பாதுகாக்கும் ஐஸ்கட்டிகள் நேரடியாக சூரிய ஒளியில் படுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே