எதிர்கால எரிபொருளாக கருதப்படும் பசுமை ஆற்றலில் தன்னிறைவு அடைவது அவசியம் – பிரதமர் மோடி

எதிர்கால எரிபொருளாக கருதப்படும் பசுமை ஆற்றலில் தன்னிறைவு அடைவது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பொது பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அப்போது, இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதில் முக்கியப் பங்கு இளைஞர்களை தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக உருவாக்குவதே.

ஒரு இளைஞருக்கு தான் பெற்ற கல்வி, தன்னுடைய திறன், அறிவு மீது நம்பிக்கை வரும் போதுதான் தன்னம்பிக்கைப் பிறகும் என்றார்.

மேலும், நாட்டில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனம் சோதனை செய்யப்பட்டுள்ளது.

எதிர்கால எரிபொருளாக கருதப்படும் பசுமை ஆற்றலில் தன்னிறைவு அடைவது மிகவும் அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கு அடுத்தபடியாக, கல்வி, திறன், ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பு போன்றவற்றுக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையில் இந்திய மொழிகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டுள்ளது என்றும் மோடி கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே