வேளச்சேரி தொகுதியில் சமக ராதிகா சரத்குமார் போட்டி..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சி, சட்டப்பேரவைத் தோதலில் இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலையும் சரத்குமார் கடந்த வாரம் சந்தித்துப் பேசினார்.

கூட்டணி குறித்து இறுதி முடிவை கமல் அறிவிப்பார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய துணைப் பொதுச் செயலாளர் விவேகானந்தன், சென்னை வேளச்சேரி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

வேளச்சேரி தொகுதியில் திமுகவைச் சேர்ந்த வாகை சந்திரசேகர் தற்போது எம்எல்ஏ-வாக உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே