பெரியார் குறித்த ரஜினியின் சர்ச்சை கருத்து புகார்: இன்று உத்தரவு

பெரியார் குறித்து, துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த் வெளியிட்ட சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கில், சென்னை – எழும்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

பெரியார் தலைமையில் சேலத்தில் 1971 – ல் நடைபெற்ற பேரணியில், நிர்வாண நிலையில் ராமர், சீதை உருவப்படங்கள் தூக்கிச் செல்லப்பட்டதாக ரஜினிகாந்த் பேசியதை எதிர்த்து,திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்த வழக்கு, சென்னை- எழும்பூர் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில், ரஜினிக்கு ஆதரவாக ஆறுமுகம் என்பவர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து,வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரோஸ்லின் துரை, இந்த வழக்கின் தீர்ப்பு, இன்று வழங்கப்படும் என அறிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே