நாளை மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சந்திக்கும் ரஜினி ?

மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் நாளை சந்தித்துப் பேச உள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை கடந்த வாரம் சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனையின் போது ஒரு விஷயத்தின் தனக்கு ஏமாற்றம் இருந்ததாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் நாளை காலை 8 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ராகவேந்திரா மண்டபத்துக்கு வர வேண்டும் என ரஜினி தரப்பில் இருந்து அழைப்பு விடுத்துள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆலோசனையை தொடர்ந்து ரஜினி மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே