விராட் கோலியை வலைப்பயிற்சியில் ஆட்டிப்படைத்த 17 வயது சிறுவன்; இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில்

2018-ல் தென் ஆப்பிரிக்காவில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஜொகான்னஸ்பர்க் மைதானத்தின் வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் பயிற்சியின் போது விராட் கோலிக்கு தென் ஆப்பிரிக்காவின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் பந்து வீசினார்.

2018-ல் தென் ஆப்பிரிக்காவில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஜொகான்னஸ்பர்க் மைதானத்தின் வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் பயிற்சியின் போது விராட் கோலிக்கு தென் ஆப்பிரிக்காவின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் பந்து வீசினார்.

அப்போது தொடர்ந்து 3 பந்துகள் விராட் கோலி ஆட முயன்று பந்துகள் ஸ்விங் ஆகி மட்டையைக் கடந்து சென்றன, விராட் கோலி தொடர்ச்சியாக 17 வயது பவுலரிடம் பீட்டன் ஆனார். உடனே விராட் கோலியே வெல் பவுல்டு என்று அவர்களைப் பாராட்டியிருமிருக்கிறார், இவருடைய இரட்டைப்பிறவி சகோதரர் டுவான் ஜேன்சனும் விராட் கோலிக்கு வீசியுள்ளார், இருவருமே இடது கை வீச்சாளர்கள், ட்வின்ஸும் கூட. இருவரும் கிட்டத்தட்ட 7 அடி உயரம் கொண்டவர்கள்.

இந்த மார்கோ ஜேன்சன் மீண்டும் கோலிக்கு வீசவிருக்கிறார், இந்த முறை ஐபிஎல் தொடரில். ஆம். மும்பை இந்தியன்ஸ் அணி மார்கோ ஜேன்சனை அவரது அடிப்படை விலையான ரூ20 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது. மேலும் இந்த மார்கோ ஜேன்சனை மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி 2 ஆண்டுகளாக தடம் கண்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக மார்கோ ஜேன்சன் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்குக் கூறும்போது, “ஆம் நாங்கள் இதை நம்பவில்லை. உண்மையாகக் கூற வேண்டுமெனில் 3 ஆண்டுகளுக்கு முன்பாக ஐபிஎல் பற்றி நாங்கள் யோசிக்கக் கூட இல்லை. எனவே நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் பெருமைக்குரியவர்களாகவும் எங்களை கருதுகிறோம்.

நான் 6 அடி 8 அங்குலம், இப்போது அதிகபட்சம் 141, 143 கிமீ வேகம் வீசுகிறேன்” என்றார்.

டுவான் ஜேன்சன், மார்கோ ஜேன்சன் இருவரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆடப்போகும் நட்சத்திர ட்வின்ஸ் ஆக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். மார்கோ ஜேன்சன், ராகுல் திராவிடையும் சந்தித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது. ஏற்கெனவே இடது கை வேகப்பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இருக்கிறார், இதில் மார்கோ ஜேன்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே