வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தபோதும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், வரும் மார்ச் ஒன்றாம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளார்
அதன்படி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அதேபோல், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் உள் பகுதியிலும் இன்று மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் சிவகங்கை மாவட்டத்திலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மழைக்கு பின் மேகங்கள் கேரளா நோக்கி நகர்ந்து செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

