இராவண கோட்டம் படத்தின் FIRSTLOOK போஸ்டர் வெளியீடு!

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் ஷாந்தனு நடிப்பில் வெளியாக இருக்கும் “இராவண கோட்டம்” திரைப்படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

“மதயானைக் கூட்டம்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.

கதிர் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது.

விமர்சகர்கள் மத்தியில் நல்லப் படம் என்ற பெயரை “மதயானைக் கூட்டம்” பெற்றது.

இதன் பின்பு 6 ஆண்டுகள் கழித்து நடிகர் ஷாந்தனுவை வைத்து விக்ரம் சுகுமாரன் “இராவண கூட்டம்” இயக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்கிறார், கண்ணன் ரவி என்பவர் இராவண கூட்டத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் வெளியானதும், பல பிரபலங்களும் ஷாந்தனுவுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே