பாலியல் புகாரில் சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளி ஆசிரியர் ஆனந்த் போக்சோ சட்டத்தில் கைது..!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை அடுத்து சேத்துப்பட்டு மகரிஷி பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீது மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார்.

இந்த நிலையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் அடிப்படையில் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்

பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் இந்த நடவடிக்கை எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆனந்தன் போக்சோ சட்டத்தின் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் போலீசார் விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே