பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி

பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் இந்த வாரம் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துவிடும்,தனிமனிதரின் ஈகோவை பாதுகாக்க அமல்படுத்தப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கு, நாட்டில் கொரோனவை பரவச் செய்து விட்டது என விமர்சனம் செய்துள்ளார்.

மோடி அரசு தன்னிறைவு பெற்றதாக கூறுகிறது. நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் பிரதமர் மயில்களுடன் பிஸியாக இருக்கிறார் என ராகுல் காந்திகுறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனாவுக்கு எதிரான போரை சரியாக திட்டமிடாமல் நடத்துவதால் இந்தியா படுகுழியில் விழுந்து இருப்பதாக அவர் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார்.

மத்திய அரசின் திட்டமிடப்படாத நடவடிக்கையால் வரலாறு காணாத அளவுக்கு உள்நாட்டு மொத்த உற்பத்தி 24 சதவீதம் குறைந்து இருப்பதாகவும்; 12 கோடி வேலைவாய்ப்புகளை இழந்து இருப்பதாகவும், ரூ.15½ லட்சம் கோடி கூடுதல் கடன் சுமை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே