கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும்; தடுப்பூசி உலகில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும், அது மக்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் பார்லி மழைக்கால கூட்டத் தொடர் இன்று (செப்,14) தொடங்க உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எம்.பி.,க்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இருசபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

காலை 9 மணிக்கு தொடங்கவுள்ள கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடி, பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

செய்தியாளர்களிடம் மோடி கூறியதாவது: கொரோனாவும் இருக்கிறது, கடமையும் இருக்கிறது. கடமைக்கான பாதையைத் தேர்ந்தெடுத்த எம்.பி.,க்களுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த முறை ராஜ்யசபா, லோக்சபா ஆகியவை ஒரு நாளில் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும். இது சனி, ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.

அனைத்து எம்.பி.க்களும் இதை ஏற்றுக்கொண்டனர்.

கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

உலகில் எங்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.

நாடு ஒன்றுபட்டு ராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே