பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா இல்லை..!!

தேமுதிக பொருளாளரும் விருத்தாசலம் வேட்பாளருமான பிரேமலதாவிற்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் முதல் முறையாக விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் கடந்த 18ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அவரது தம்பி எல்.கே.சுதீஷ் உடனிருந்தார்.

இதையடுத்து விருத்தாசலம் தொகுதியிலேயே தங்கி பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே பிரேமலதாவின் தம்பியும் கட்சியின் துணை செயலாளருமான எல் .கே. சதீஷ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதனால் சுதீஷின் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு எடுத்துள்ளது.

இதனால் நேற்று விருத்தாச்சலம் தொகுதியில் வாக்கு சேகரிபில் ஈடுபட்டிருந்த பிரேமலதா விஜயகாந்த்தை சுகாதாரத்துறை அலுவலர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அழைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரேமலதாவின் பரப்புரையை தடுக்கவே இப்படி செய்வதாக தேமுதிக தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.

இருப்பினும் நிலைமையை புரிந்துகொண்ட பிரேமலதா பரப்புரை முடிந்து உணவு இடைவெளியின் போது பரிசோதனை மேற்கொண்டார்.

இந்நிலையில் பிரேமலதாவின் கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளதாக கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி செந்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்றிரவு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரேமலதா, கடமையை செய்தால் கடவுள் நமக்கு வழி வகுப்பார் .நம்மை பயமுறுத்துகிறார்கள்.

நான் நன்றாகத் தான் உள்ளேன்; கொரோனா இல்லை, நெகட்டிவ் என்ற முடிவு தான் வரும். நம்பல்லாம் பனங்காட்டு நரிகள் இந்த சலசலப்புக்கு அஞ்சமாட்டோம் என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே