ரேஷன் கடைகளில் இன்று பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்..!!

தமிழக அரசு அறிவித்துள்ள இரண்டாயிரத்து 500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு, இன்று முதல் ரேசன் கடைகளில் விநியோகம் செய்யப்படவுள்ளது.

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுநீளக் கரும்பு, துணிப்பை உள்ளிட்ட பொருட்களுடன் 2,ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டதின்படி, மாநிலம் முழுவதும் 2 கோடியே 10 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு, பொங்கல் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது.

இத்திட்டத்தை அந்தந்த மாவடங்களில் அமைச்சர்கள் துவக்கி வைத்துள்ளனர்.

ரேசன் கடைகளில் அதிக கூட்டம் சேருவதை தவிர்ப்பதற்காக, வீடு வீடாக சென்று, முன்கூட்டியே டோக்கன் வழங்கும் பணியும் நடைபெற்றது. 

டோக்கனில் குறிப்பிட்டுள்ள தினத்தில் பொங்கல் பரிசு பெற்றும் கொள்ளும்படியும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று காலை முதல் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகிக்கும் பணி துவங்கப்படுகிறது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே