குழந்தைகளுடன் சென்னை வரும் விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு: தமிழக அரசு!!

குழந்தைகளுடன் விமானத்தில் வரும் பயணிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் விமானத்தில் சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகள், பிற மாநிலங்களில் இருந்து சென்னை வரும் விமான பயணிகள் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

அதில் உடனடி மருத்துவத் தேவை இருப்பவர்கள், உறவினர்களின் மறைவுக்கு வந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், 75 வயதுக்கு மேலானவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த அரசாணையில் திருத்தம் செய்து சென்னை வருவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்பு பிசிஆர் சோதனை செய்து நெகட்டிவ் முடிவு வந்திருந்தால் அவர்களுக்கும் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே