12ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திற்கு மூன்று மதிப்பெண் 12ஆம் வகுப்பு வேதியல் பாடத்தில் 3 மதிப்பெண் போனஸ் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்வுத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியுள்ளது என்பதும், இந்த பணியில் 43 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் வேதியியல் பாடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்படும்போது அச்சுப்பிழை ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து அந்த கேள்விக்கு மாணவர்கள் எந்த பதிலை எழுதியிருந்தாலும் 3 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது
கேள்வி எண் 31 என்ற இந்த கேள்விக்கு மூன்று மதிப்பெண்கள் போனஸ் தர வேண்டும் என்று விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இதே போன்று வேறு பாடங்களிலும் ஏதாவது தவறு இருந்தால் அதற்குரிய போனஸ் மதிப்பெண்களும் வழங்கப்படும் என்றும் அனைத்து கேள்விகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருப்பதாகவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.