இந்த 2 போன்களில் ஒன்றை வாங்க பிளான் பண்ணீங்களா? ஐயோ பாவம் நீங்க!

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் மீது அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி உயர்வு காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் மொபைல்களின் விலைகளை அதிகரிததன. இது நடந்த ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி 5ஐ மற்றும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்களின் விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட கடைசி விலை உயர்வுடன் ஒப்பிடும்போது ரியல்மி 5i மற்றும் ரியல்மி 6 ஆகிய இரண்டுமே ரூ.1,000 என்கிற விலை உயர்வை பெற்றுள்ளன. இந்த புதிய விலைகள் ஏற்கனவே ரியல்மி இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. நினைவூட்டும் வண்ணம் ரியல்மி 5i ஸ்மார்ட்போன் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் ரூ.8,999 க்கும், பின்னர் மார்ச் மாதத்தில் ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாடானது ரூ.16,999 க்கும் அறிமுகமானது.
இந்தியாவில் ரியல்மி 5ஐ மற்றும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்களின் தற்போதைய விலை:

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாடு ஆனது ரூ.9,999 க்கு பதிலாக இப்போது ரூ.10,999 க்கு (நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி) வாங்க கிடைக்கிறது. மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி 5i ஸ்மார்ட்போனின் 128 ஜிபி சேமிப்பு மாறுபாடு இப்போது ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மறுகையில் உள்ள ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.13,999 க்கு பதிலாக இப்போது ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாறுபாடு இப்போது ரூ.16,999 என்றும், இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாறுபாடு ஆனது ரூ.17,999 என்றும் விலை உயர்வை பெற்றுளளன.

சமீபத்தில் விலை உயர்வை பெற்ற மற்ற ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விவரம்:

கடந்த வாரம் தான், ரியல்மி நிறுவனம் அதன் லேட்டஸ்ட் பட்ஜெட் மாடல்களான நார்சோ 10ஏ மற்றும் சற்று பழைய மாடலான ரியல்மி சி3 ஆகியவைகள் விலை உயர்வைப் பெற்றன. ரியல்மி நார்சோ 10A ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாடு இப்போது ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் வெளியீட்டு விலை ரூ.8,499 ஆகும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்டில் எந்த விலை உயர்வும் காணப்படவில்லை.
ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் இரண்டு வகைகளும் – 3 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி – ரூ.1,000 என்கிற விலை உயர்வை பெற்று இப்போது ரூ.8,999 க்கும் மற்றும் ரூ.9,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே