இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் – வாழ்க்கை வரலாறு..!!

சக்கர நாற்காலியில் அமர்ந்துக் கொண்டே, சாதனைகள் பல செய்துக் காட்டிய, புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி ஒரு சிறப்பு தொகுப்பு.

1.1942 ஜனவரி 8 ஆம் தேதி பிறந்த ஸ்டீஃபன் 8 வகுப்பு வரை ஆவ்ரேஜ் ஸ்டூடண்ட் தான். கணிதத்தில் அவர் கொண்ட நாட்டமே அவரை, விஞ்ஞானி வரை உயர்த்தியது.

2. இரண்டாம் உலகப்போரின் போது ஸ்டீஃபன் தனது குடும்பத்தாருடன் அல்பான்ஸ் நகரத்தில் குடிபெயர்ந்தார். அங்கிருந்த பள்ளி ஒன்றில் கணிதத்தை தனியாக எடுத்து படிக்கும் பிரிவு இல்லாததால், இயற்பியல் பாடத்தை தேர்வு செய்து படித்தார்.

3. 1962 ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்டவியல் குறித்து ஆய்வினை மேற்கொண்டார். 1965 ஆம் ஆண்டு பி எச் டி பட்டம் பெற்றார். ஸ்டீஃபனின் தந்தைக்கு அவரை மருத்துவராக்க வேண்டும் என்பதே கனவாம். ஆனால், ஆராய்ச்சி படிப்பில் அதிக கவனம் செலுத்திய ஸ்டீஃபனுக்கு மருத்துவ துறை மீது  சிறிதளவும் நாட்டம் இல்லை.

4. ஸ்டீஃபனுக்கு 21 வயதாகும் போது தான் ஒரு கொடுமையான சம்பவம் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்தது. அவரை  ஏஎல்எஸ் (amyotrophic lateral sclerosis ) என்ற நோய் தாக்கியது. நரம்பு தொடர்பாக ஏற்பட்ட இந்த பிரச்சனை அவரை வாழ் நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் அமர வைத்தது. இதன் பின்பே, ஸ்டீஃபன்  உடல் இயக்கத்தை முற்றிலுமாக மறந்தார்.

5.  1985 ஆண்டு ஸ்டீஃபன்  ஜெனிவாவிற்கு பயணித்தார்.  அப்போது அவரை நிமோடியா  காய்ச்சல் தாக்கியது. அதில் சுயநினைவை இழந்த அவருக்கும்  வெண்ட்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்க பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் ஹாக்கிங்கின் மனைவி ஜேன் அதை  மறுத்துவிடவே ஸ்டீஃபனுக்கு  ட்ராக்டோமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

6. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம்  ஸ்டீஃபனுக்காக பிரத்யேகமாக  speech synthesizer என்ற கருவியை உருவாக்கி தந்தது. ஹாக்கிங் உட்கார்ந்திருக்கக்கூடிய வீல் சேருடன் ஒரு கணினி இணைக்கப்பட்டிருக்கும், ஹாக்கிங்கின் கை அசைவுகளைக் கொண்டு கணினித் திறையில் தெரிகிற வார்த்தைகளை தேர்ந்தெடுத்தால் அது சத்தமாக ஒலிக்கும். இதுவே அந்த கருவியின் செயல்பாடு.

7. இறப்பதற்கு முன்பு வரை ஸ்டீஃபன் அணிந்திருந்த கண் கண்ணாடி  இன்ஃப்ரா ரெட் ஆற்றல் கொண்டது.  இதன் மூலமாக கன்னத்து தசையின் அசைவினை உணர்ந்து அதற்கேற்ப கணியில் ஸ்டீஃபன் கூற விரும்புவது எழுத்து வடிவமாக  பிரதிபலிக்கும்

8. கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை செய்து வந்த ஸ்டீஃபனுக்கு இன்டெல் நிறுவனம், உருவாக்கி கொடுத்த கணினியையும், அவர்கள் உருவாக்கிய ரோபோட்டிக் குரலும் பெரிதளவில் உதவியது.

9.  சிம்ப்சன்ஸ் என்ற பெயரில் அனிமேஷன் கார்டூன் வடிவில் ஸ்டீஃபனின் வாழ்க்கை வரலாறு  படமாக்கப்பட்டது. இதற்கு குரல் கொடுத்தவரும்  தி க்ரேட் சைன்ஸ்டிட் ஸ்டீஃபன் ஹாக்கிங் தான்.

10. ஸ்டீஃபன் மிகவும் சோம்பேறி குணம் படைத்தவராம். அவரது பள்ளி பருவத்தில் ஆசியர்கள் மற்றும் பெற்றோர்கல் உடனாக மீட்டிங் போது அவரை சோம்பேறி என்றே ஆசிரியர்கள் குறை  கூறுவார்களாம்.  மிகுந்த நகைச்சுவையாக  பழக கூறியவர் ஸ்டீஃபன் என்று அவரது நண்பர்கள் அடிக்கடி  சொல்வார்கள்.

11. 2006 ஆம் ஆண்டு ஹாக்கிங் விண்வெளிக்குச் செல்ல விருப்பம் தெரிவிக்கவே, அறிவியாலாளர்கள் அவரது விருப்பத்தை சாத்தியப்படுத்தினார்கள். 2007 ஆம் ஆண்டு மிகப்பெரும் கோடீஸ்வரரான ரிச்சர்ட் ப்ரான்சன் ஹாக்கிங் விண்வெளிக்கு பயணிக்க ஆகும் செலவினை முழுவதுமாக தான் ஏற்பதாக சொன்னார்.

12,  ஸ்டார் ட்ரெக் என்ற சேனலில் நெக்ஸ்ட் ஜெனரேசன் என்ற டிவி நிகழ்ச்சியிலும் ஸ்டீஃபன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அப்போது அவரை ஆராய்ச்சி மாணவர்கள் பலர் நேரில் சந்தித்து பல கேள்விகளை ஸ்டீஃபனின் கேட்டனர்.

13. டைம் மெஷின்,ப்ளாக் ஹோல்,ஏலியன் குறித்தெல்லாம் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் A Brief Histroy of Time என்ற புத்தகம் தமிழ் உட்பட 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த அறிவியலாளர் என்று போற்றப்படும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் மறைவு அறிவியல் துறைக்கே மாபெரும் இழப்பு.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே