சென்னையில் பெட்ரோல் விலை 90 ஐத் தாண்டியது..!!

இன்று சென்னையில், பெட்ரோலின் விலை புதிய உச்சமாக ரூ.90ஐ தாண்டியது.

பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை தினசரி நிர்ணயம் என்ற நடைமுறைக்கு கொண்டு வந்தது அரசு. அதன் பின்னர் ஏறுமுகமாகவே உள்ளது எரிபொருளின் விலை.

கடந்த 27ம் தேதிக்கு பிறகு விலை மாற்றம் இல்லாமல் இருந்தது. பின்னர் பிப்ரவரி 4,5ம் தேதிகளின் விலை ஏற்றம் இருந்தது.

அதன்பின்னர் 6 மற்றும் 7,8ம் தேதிகளில் விலை மாற்றம் இல்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் விலை ஏற்றம் கண்டது பெட்ரோல், டீசல் விலை. 

இந்நிலையில் நேற்றும் விலை ஏறுமுகத்தில் இருந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 89.96ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 82.90ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில், பெட்ரோலின் விலை புதிய உச்சமாக ரூ.90ஐ தாண்டியது. இன்று பெட்ரோலின் விலை 22 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.90.18க்கு விற்பனையாகிறது.

டீசல் விலை 28 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.18க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலையேற்றம் வாகன ஓட்டிகளை கலக்கமடைய வைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே