தென்மாவட்டங்களில் ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ. 10 லிருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் உள்ள முக்கிய நிலையங்களான எழும்பூர், தாம்பரம் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தி ரயில்வேதுறை உத்தரவிட்டது.

இந்நிலையில் சேலம், ஈரோடு, திருப்பூர்,கோவை ஆகிய ரயில்நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் அதாவது ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்துரூ.50 ஆக உயர்ந்துள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கொரோனா இரண்டாம் அலை பரவுவதால் மக்கள் நெர்சலைக் குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வேதுறை அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே