தமிழக மக்களிடையே முதல்வர் பழனிசாமி உரை!

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி நேரலையில் பொதுமக்களிடம் உரை நிகழ்த்தினார். 

தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி நேரலையில் பொதுமக்களிடம் உரை நிகழ்த்தினார். 

இதில் பேசிய முதல்வர்,” கரோனா வைரஸ் இயல்பு வாழ்கைகையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.
கரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெருவோம் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

தமிழ்நாட்டில் கரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகம்.கரோனா வைரஸ் சமூக பரவலாக மாறாமல் இருக்க தமிழக அரசு போராடி வருகிறது.

இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

ஜீன் 4 ம் தேதி வரை தமிழ்நாட்டில் சுமார் 5.50 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்களில் 86 % பேர் எவ்வித அறிகுறிகளும் இல்லாதவர்கள் என்பதை கண்டறிய முடிந்தது.

இந்த நோய் தொற்றினை பேரிடராக அறிவித்து கடந்த 4 ம் தேதி வரை , ரூ.4333.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக 72 மையங்கள் மூலம் தினமும் 13,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

123 அரசு மருத்துவமனைகள் , 169 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 292 கோவிட் மருத்துவமனைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஜீன் 3 வரை ரூ.378 கோடியே 96 லட்சத்து 7,354 வரப் பெற்றுள்ளது. 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள் , 14 நலவாரிய தொழிலாளர்கள் , பதிவு செய்யப்படாத கைத்தறி நெசவாளர்கள் , முடிதிருத்துவோர் என சுமார் 35.65 லட்சம் பேருக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2.01 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ரேசன் பொருட்கள் ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

மேலும்.”விமான நிலையங்களில் அதிக சோதனை, எல்லைகள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்று பரவுவது குறைந்தது.

2,500 செவிலியர்கள், 530 மருத்துவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். 292 தனியார் மருத்துவமனைகள் மூலம் கரோனா சிகிச்சை வழங்கப்படுகிறது.

சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் செலுத்த மக்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. நியாய விலைக்கடைகளில் விலையில்லா பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

3 லட்சம் பாதையோர வியாபாரிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 17 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இனியும் பொதுவெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். சமூக விலகலை பின்பற்றி கரோனாவை வெல்வோம்” என்று தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே