மெரீனாவில் போராட்டம் நடத்திய எச்.ராஜா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு!

சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்திய எச்.ராஜா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு  பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

தர்ணாவில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ஹெச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 311 பேர் மீது

  • சட்ட விரோதமாக கூடுதல்,
  • அத்துமீறி நடந்து கொள்ளுதல்,
  • கலைந்து செல்லும்படியும் கூறியும் அதனை ஏற்க மறுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே