நீங்கள் ஏர்டெல் யூசரா?உங்களுக்கு ஒரு வருட அமேசான் பிரைம் இலவசம்!

ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் பல இலவச சேவைகளை அளித்து வருகிறது. இலவச ஸ்மார்ட் செக்யூரிட்டி, இலவச புத்தகங்கள், இலவச சந்தாக்கள் என பலவற்றை வழங்கி வருகிறது.

இந்நிலையில் அமேசான் பிரைம் சேவகளை ஒரு வருடத்திற்கு இலவசமாக ஏர்டெல் நிறுவனம் வழங்க உள்ளது. இதன் மூலம் ஒன் டே டெலிவரி, விற்பனைக்கான ஆரம்ப காலங்களில் சிறப்பு சலுகைகள், விளம்பரங்கள் இல்லா பாடல்கள் என பலவற்றை இலவசமாக பெறலாம்.

அதனை பெறுவதற்கான கண்டிஷன்கள்:

1. இதனை பெறுவதற்கு போஸ்ட்பெய்டு பயனாளர்கள் ரூபாய் 499 அல்லது அதற்கு மேற்பட்ட சேவையில்ல் இருக்கவேண்டும்
2. ப்ரீபெய்டு பயனாளர்கள் 349 அல்லது அதற்கு மேற்பட்ட சந்தாவில் இருக்க வேண்டும்
3.அதேபோல் பிராட்பேண்ட் பயனாளர்கள் 999 கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்
4.இந்த சலுகை டிடிஎச் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது

இதனை பெறுவதற்கான வழிமுறைகள்

1.முதலில் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து ஏர்டெல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
2.மொபைல் எண்ணை பயன்படுத்தி லாகின் செய்து ‘Discover Airtel Thanks’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்
3.அதன்பின்னர் அமேசன் பிரைம் மெம்பர்ஷிப் விருப்பத்தை தேர்வு செய்யவும்
4.அதன்பின்னர் ‘Claim‘ காட்டப்படும் அதனை தொட வேண்டும்
அப்போது அமேசான் பிரைம் Login பக்கத்திற்கு அது கொண்டு செல்லும்.
5.அங்கு உங்களுக்கான ரீவார்டை பெற லாகின் செய்யுங்கள் இறுதியாக உங்களுக்கு இலவசா அமேசான் பிரைம் ஒரு வருடத்திற்கு கிடைத்துவிடும்

Related Tags :

Airtel| Amazonprime

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே