என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு : ஊழியர் சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது.

நேற்று முன் தினம் 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 17 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

அதுமட்டுமில்லாமல் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்களின் உயிரிழப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் இது போன்ற சம்பவங்கள் தொடருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பல தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்.எல்.சி நிறுவனம் சார்பில் தலா ரூ.30 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டது. மேலும், அரசு சார்பிலும் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிரந்தர ஊழியர் சிவக்குமார் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே