நிர்பாயா வழக்கு : தன்னைத்ததானே காயப்படுத்தி கொண்ட வினய் ஷர்மா.!

கடந்த 16-ம் தேதி குற்றவாளி வினய் ஷர்மா சுவரில் தனது தலையை மோதி கொண்டு தன்னைத்ததானே காயப்படுத்தி கொண்டார்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார்.

இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.

பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான்.

அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

மீதமுள்ள நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 1-ம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் குற்றவாளிகள் புதிய மனுக்கள் தாக்கல் செய்ததால் தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்.

அவரது மனுவை ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

பின்னர் வினய் ஷர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையெடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தூக்கு தண்டனையை ரத்து செய்ய குற்றவாளிகள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.

அதில் திகார் சிறையில் இருக்கும் வினய் ஷர்மா கடந்த 16-ம் தேதி சுவரில் தனது தலையை மோதி கொண்டு காயத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

பின்னர் அவரை மீட்டு சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் இது போன்று குற்றவாளிகள் 4 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்காக அவர்கள் அறையில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே