செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை..; வெள்ள அபாய எச்சரிக்கை..!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட அறிவிப்பில், இன்று(25.11.2020) மதியம் 12 மணி அளவில் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளதால் காவலூர்,குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம். திருநீர்மலை வழிநிலை மேடுபகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கியமான ஏரி செம்பரம்பாக்கம் ஏரி எப்போது வேண்டுமானாலும் முழு கொள்ளவை எட்டும் நிலை உள்ளது.

அத்துடன் நீர் வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

எனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 

ஏரி நிறைந்தால் அதற்கு மேல் வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் உயரம் 21.55 அடியாக இருந்தது.

மொத்த கொள்ளளவு 2999 மில்லியன் கன அடியாகும் ஏரிக்கு நீர்வரத்து 4027 என்கிற அளவில் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஏரி இன்று நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏரி நிறைந்த பின்னர் வரும் நீர் வெளியேற்றப்பட உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 50000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் உள்ளது.

அந்த அளவிற்கு வடிகால் வசதிகள் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட முக்கிய அறிக்கையில், இன்று(25.11.2020) மதியம் 12 மணி அளவில் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது.

எனவே காவலூர்,குன்றத்தூர். நத்தம், திருமுடிவாக்கம். திருநீர்மலை வழிநிலை மேடுபகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே