இரவோடு இரவாக மீண்டும் பெரியார் ஈவெரா சாலை என பெயர் மாற்றம்..!!

சென்னையில், பெரியார் ஈவெரா சாலைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அந்தப் பெயர் பலகையில் ஈவேரா பெரியார் சாலை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ளப் பெயர் பலகையில், பெரியார் ஈவெரா சாலை என்ற வாசகம் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங் சாலை என மாற்றப்பட்டிருந்தது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அந்தப் பெயர் பலகையில் கருப்பு மை பூசப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பெயர் பலகையில் பெரியார் ஈவெரா சாலை என ஸ்டிக்கர் ஒட்டி விட்டுச் சென்றனர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே