சனிக்கிழமை என்பது பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல போட்டியாளர்களுக்கும் ரொம்பவே முக்கியமான நாள்.

வாரம் முழுக்க தங்கள் ஆக்டிவிட்டி எப்படி என்பதையும் அடுத்த வாரத்திற்கான செயற்திட்டத்தை அநேகமாக கமலின் வார்த்தைகளைக் கொண்டே முடிவெடுக்கிறார்கள் ஹவுஸ்மேட்ஸ்.

நேற்றைய எப்பிசோட் காரசாரமாகச் சென்றது. ஆனால், அனைவருக்கும் சமமாகச் சென்றதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். எப்படியென கட்டுரையில் பார்ப்போம்.

வியாழக்கிழமை தொடர்ச்சி

நியூ இயர் கொண்டாட்டம் முடிந்ததும், ரம்யாவிடம் விவாதிக்கொண்டிருந்தார் ஆர். பாலா மற்றும் ரியோவைப் பற்றிக் குறை கூறிக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் ரம்யாவை குறை சொல்ல ஆரம்பித்தார். 

இந்த இடத்திற்கு ஆரி வருவார் என்று ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான்.

டைட்டில் வெல்ல தனக்குப் போட்டியாளராக யார் யார் இருக்கக்கூடுமோ அவர்களை டார்கெட் செய்து ஆடுகிறார் ஆரி. பாலா மற்றும் ரியோவை கிட்டத்தட்ட வீழ்த்தி விட்டார். அவரின் அடுத்த இலக்கு ரம்யா.

அதை நேற்றே கட்டுரையில் சொல்லியிருந்தேன். நேரம் பார்த்து சரியாக இழுத்துவிட்டார். அவர் நினைத்ததுபோலவே ரம்யாவும் பொறியில் சிக்கி விட்டார்.

மீண்டும் சோபா ஏரியாவில் எல்லோரும் இருக்கையில் பாலா பேச்சை ஆரம்பிக்க, அதை அழகாக தம் மீது தவறே இல்லாததுபோல வளர்த்தெடுத்தார் ஆரி.

காதல் கண் கட்டுதே என்று எப்படி நீங்க சொன்னீர்கள். அதில் ஒரு பெண்ணும் சம்பந்தம் பட்டிருக்கிறாரே என்று கேட்டதும், ‘இப்பதான் மீன் புழுவை தொட்டிருக்கு. இன்னும் கொக்கியைத் தொடல’ எனக் காத்திருந்தார் ஆரி.

கொக்கியைத் தொடாமலே திரும்பும் மீனாக பாலா நழுவுவது தெரிந்ததும், தானே போய் ஷிவானி பற்றிய பேச ஆரம்பித்தார்.

பாலா உட்சபட்ச கோபத்துக்குச் செல்ல, சமாதானம் செய்ய பலர் வந்தாலும் ரம்யாவை குறி வைத்து ஒரு கமெண்ட் செய்தார் ஆரி. அதனால் அவரும் அப்செட் ஆக, நிம்மதியாக தூங்குவதுபோல அடுத்த நாள் ப்ளானைப் போட்டுக்கொண்டிருந்தார் ஆரி.

வெள்ளிக்கிழமை

முதன்நாள் நடந்த நிகழ்வுக்கு ஷிவானியிடம் தனியே ஸாரி கேட்டுக்கொண்டே பாலா பற்றி ஒரு ஸ்ருகு வைக்க முயன்றார். ரியோ, பாலா, ரம்யாவை எதிர்பக்கம் தள்ளி விட்டிருந்தார் ஆரி.

கேபி, ஷிவானி, சோம், ஆஜித் எந்தப் பக்கம் செல்வது எனக் குழம்பியிருந்தனர். அவர்கள் யாரும் ஆரியின் இலக்கு இல்லை. ஏனெனில், அவர்கள் டைட்டில் வெல்வார்கள் என்று அவர்களே நம்ப மாட்டார்கள்.

சனிக்கிழமை

கமல்ஹாசன் வருகை தந்தார். உறவினர் வந்ததைப் பற்றி லேசாகப் பேசினார். ஷிவானிக்கு மட்டும் ஏமாற்றம் இருப்பதை சரி செய்ய, மீண்டும் ஷிவானி அம்மாவிடம் பேசி சமாதானம் செய்ய முயன்றார்.

ஆனால், ஷிவானியின் அம்மா அன்றைக்கு வந்த மனநிலையில்தான் இருந்தார். அதனால், அந்த முயறி தோல்வியில் முடிந்தது.

அதனால் என்னவே கமல்ஹாசன் கோபத்துடன் தொடர்ந்தார். ஆரியிடம் கோபமாய் பேசுவதுபோல பேசிவிட்டு, அவரை ஓர் ஓரத்தில் உட்கார வைத்தார்.

அடுத்து வீட்டை ஆரி Vs ஹவுஸ்மேட்ஸ் என்று மாற்றினார் கமல். ஏற்கெனவே வீட்டின் சூழல் இந்த நிலையில்தான் இருந்தது. அதை கமல் அதிகாரபூர்வமாக அறிவித்தே விட்டார்.

ஒவ்வொருவரும் ஆரி பற்றிய கருத்துகளை, விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால், ஆரியின் வழக்கறிஞராக மாறிய கமல் முன் எதுவும் எடுபட வில்லை.

ஒருவரிடம் இருக்கும் சின்னச் சின்னக் குறையை விரிவாக விவாதிக்கும் ஆரி, நிறைகளைப் பாராட்டுவதே இல்லை.

ஒருவரைப் பற்றி பேசுகையில் மற்றவர் மீதான குறைகளை அங்கே பதிவு செய்கிறார்.

ஒரு பிரச்சனையை பேசி சரி செய்யலாம் என்று பேச ஆரம்பித்தால் நான்காவது, ஐந்தாவது வாரங்களில் நடந்ததைப் பற்றி இழுத்து பேசி குழப்புகிறார்.

ஒரு கேள்விக்கான பதிலைச் சொன்னாலும், அவர் எதிர்பார்க்கிற பதில் என ஒன்றை நினைத்து திரும்ப திரும்ப கேட்டு களைப்புற செய்கிறார்.

பேக்கெஜ் வைத்துகொள்ள வேண்டாம் எனச் சொல்லும் அவரின் ஆழ் மனத்தில் ஒவ்வொருவர் பற்றிய பேக்கெஜ் இருக்கிறது.

ரூல்ஸ் தவிர மற்றவர்களோடு இணக்கமாக வாழ்தலும் பிக்பாஸ் வீட்டில் ஒரு தகுதி. அதை ஆரி செய்வதில்லை.

இவையெல்லாம் ஹவுஸ்மேட்ஸ் ஆரி பற்றி கூறியவை. ஆனால், இவை பற்றியெல்லாம் கமலோ ஆரியோ கவலை படவில்லை.

இந்த சீசனில் சோஷியல் மீடியாவில் வைரலாகியிருப்பஇவையெல்லாம் ஹவுஸ்மேட்ஸ் ஆரி பற்றி கூறியவை. ஆனால், இவை பற்றியெல்லாம் கமலோ ஆரியோ கவலை படவில்லை. இந்த சீசனில் சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறார்.

அதனால், அதை அப்படியே கொண்டுச்செல்ல நினைக்கிறார்களோ என்னவோ!

பாலா கத்தியதற்கு கடும் கோபத்தோடு விசாரனை செய்தார் கமல். ஆனால், அவரை கோபப்படுத்தியது பற்றிய விசாரணையே இல்லை.

இப்படி ஒரு தலைபட்சமாகவே விசாரணை சென்று, எல்லோரும் ஆரி போல மாறுங்கள் என்று சொல்லாமல் சொன்னார் கமல்.

எவிக்‌ஷனிலிருந்து காப்பாற்றுவது பகுதிக்கு வந்தார். ‘ரம்யாதான் முதலில் காப்பாற்றப்படுவார்’ என்று ஆஜித் சொன்னார்.

ஆனால், ஆரி ஆர்மி இந்த வாரம் ரம்யாவைக் குறி வைத்து தாக்கியதால் வாய்ப்பில்லை. அதேபோல கேபி காப்பாற்றப்பட்டார். கமல் விடைபெற்றார்.

ஆரியிடம் பாலா மன்னிப்புக் கேட்டார். வளவளவென பேசும் ஆரி, நிதானமாக உடைகளை மடிக்கிறார்களே என்று யோசித்தால், மைக் கீழே இருந்தது. அதை மாட்டும்வரை ஒரு வார்த்தை பேசவில்லை. அதை மாட்டியதும்தான் பேசவே ஆரம்பித்தார்.

இப்படி ஒருவர் 24X7 கேம்க்குள் மூழ்கிவிட முடியுமா? ஆச்சர்யமாக இருக்கிறது. ஆரி தன் விளக்கத்தின்போது பாலாவை மன்னிப்பதை விடவும் ரியோ பற்றிய குறைகளை விளக்கினார். ஆரிக்கு நன்கு தெரிகிறது.

ரியோ மீதான் குறை என்பது பாலா கேட்க அல்ல, கேமரா வழியே ஆடியன்ஸ் கேட்க. இதைத்தான் பெஸ்ட் பர்ஃபாமன்ஸ் என்கிறீர்களா?

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே