நேர்மையாக வரி செலுத்துபவர்களை கவுரவிக்க புதிய வரித் திட்டம் நாளை துவக்கம் – பிரதமர் மோடி

வெளிப்படையான வரிவிதிப்பு முறை மற்றும் நேர்மையானவர்களை கவுரவித்தல் என்ற புதிய வரிவிதிப்பு திட்டத்தை பிரதமர் மோடி நாளை (ஆக.,13) காணொளி கண்காட்சி மூலம் (ஆக.,13) துவக்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஸ்ரீ அனுராக் சிங் தாகூர், வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டிற்காக வரி செலுத்துபவர்கள் இந்த தேசத்தை உருவாக்குபவர்கள் அவர்களுக்காக சில சலுகைகளை உரிமைகளையும் அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, நேர்மையாக வரி செலுத்தியவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார். 

இந்த வரி மூலம் கிடைத்த நிதி கொரோனா காலத்தில் இலவச உணவு வழங்க உதவியாக இருந்தது. நாடு அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது என்றார்.

நேரடி வரி விதப்பு முறைகளை சீர்படுத்தும் முயற்சிகளின் ஒரு கட்டமாக இது துவக்கப்படுகிறது.

வரி விகிதங்களை குறைத்து நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்தும் வகையில் வரி சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுவதாக இது குறித்த செய்திக் குறிப்பில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நிலுவையில் உள்ள வரிகளை செலுத்துவதற்காக வருமான வரித்துறை ‘விவாத் சே விஸ்வாஸ் ஆக்ட், 2020’ என்ற திட்டத்தை கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கார்ப்பரேட் வரி 30ல் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டதுடன் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அது 15 சதவீதமாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே