புதிய கல்வி கொள்கையில் பள்ளி கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியது.

இதனையடுத்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இது குறித்து ஆராய13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவின் உறுப்பினர் செயலாளராக பள்ளிகல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகல்வி குறித்து ஆராயும் குழுவிற்கு பள்ளி கல்வித்துறை செயலாளர் தலைமை வகிப்பார் என அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பூஜா குல்கர்னி லதா, கவிதா ராமு, முனியநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மற்றும் கல்வி துறையை சேர்ந்த நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் மத்திய அரசின்கொள்கையை அமல்படுத்துவதற்கான ஏற்ற சூழ்நிலை குறித்து ஆராய்ந்து ஒரு ஆண்டிற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதற்கு முன்னதாக இடைக்கால அறிக்கையை அளிக்க வேண்டும் எனவும் ,புதிய கல்விகொள்கையுடன் இரு மொழி கொள்கை பொருந்துகிறதா என்பதையும் குழு ஆராயும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதிய கல்வி கொள்கையில் உயர்கல்வி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே