காவல்நிலைய மரணங்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் பதிலளிக்க உத்தரவு.. உச்சநீதிமன்றம்!!

இந்தியாவில் அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்கள் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றனவா என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதையடுத்து, காவல் நிலைய மரணங்கள் குறித்து பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நடைபெறும் காவல்நிலைய மரணங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய குற்றவியல் ஆணவக் காப்பம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

அதில் 2017 மற்றும் 2018ஆம் மட்டும் நாட்டில் 108 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே