NRC நடைமுறைப்படுத்த 65 சதவீத மக்கள் ஆதரவு : இஸ்லாமிய சமூகத்தில் 66 சதவீதம் பேர் எதிர்ப்பு

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவதற்கு 65 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதாக சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக சி-வோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் இணைந்து நாடு முழுவதும் 3000 பேரிடம் கடந்த 17ஆம் தேதி முதல் 19-ம் தேதி வரை கருத்துக்கணிப்பு நடத்தின.

இதில் அசாம் மாநிலத்தில் மட்டும் 500 பேரிடமும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய மக்களிடம் 500 பேரிடமும் கருத்து கேட்கப்பட்டது. 

அதன்படி, தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆதரவாக 65.4 சதவீதம் பேர் ஆதரவளிக்க, 28.3 சதவீத மக்கள் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இஸ்லாமிய சமூகத்தில் 66 சதவீதம் பேர் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக இருப்பதாக சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, கிழக்கு மாநிலங்களில் உள்ள 57.3 சதவீதம் பேரும், மேற்கு மாநிலங்களில் 64.2 சதவீதமும், வடமாநிலங்களில் 67.7 சதவீதம் பேரும், தென் இந்தியாவில் 58.5 சதவீதம் பேரும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே