சர்வதேச போட்டிகளில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்..!!

தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இந்தியாவுக்காக தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வருகிறார்.

முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது.

தொடர்ந்து அந்த இலக்கை ஆஸ்திரேலியா விரட்டி வருகிறது. வார்னர் காயம் காரணமாக விலக அவருக்கு மாற்றாக கேப்டன் ஆரோன் ஃபின்சும், லபுஷேனும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.
இந்தியாவுக்காக பும்ராவும், நடராஜனும் பந்து வீசினர்.

கடந்த இரண்டு ஆட்டங்களாக முதல் 25 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய ஓப்பனர்களின் விக்கெட்டை வீழ்த்தாமல் இருந்தனர் இந்திய பவுலர்கள்.

அதற்கு தீர்வு கொடுக்கும் விதமாக இந்தப் போட்டியில் ஆறாவது ஓவரில் லபுஷேன் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்.

சர்வதேச கிரிக்கெட்டில் நடராஜன் வீழ்த்தும் முதல் விக்கெட் இது.

லபுஷேனை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார் அவர்.

தொடர்ந்தும் அபாரமாக பந்துவீசி வருகிறார் நடராஜன்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே