சேட்டை செய்ததால் நான்கு வயது மகளைக் அடித்தே கொன்ற தாய் : மகாராஷ்டிராவில் கொடூரம்

மஹாராஷ்டிராவில் தன் பேச்சைக் கேட்காத குறும்புத்தனம் செய்த மகளை சுவரில் மோதி தொண்டையை நெரித்து தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

புனேவைச் சேர்ந்த 22 வயதான சவீதா என்ற பெண் தனது இருக்குழந்தைகளுடன் கணவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் மகளும் 6 மாத கைக்குழந்தையாக மகனும் உள்ளனர்.

இந்நிலையில், சவீதா மாமியார் கடந்த பத்து நாட்களுக்கு முன்புதான் இறந்துள்ளார்.

அந்தச் சடங்கில் கலந்துகொள்ள வீட்டிலிருந்த எல்லோரும் ஊருக்குச் சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் விரக்தியில் இருந்த இளம்பெண் விளையாடிக் கொண்டிருந்த மகள் தன் பேச்சை கேட்கவில்லை என்ற கோபத்தில் கொன்றதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரி ராம்நாத் கூறும்போது, கடந்த பத்து நாட்களுக்கு முன்புதான், அப்பெண்ணின் மாமியார் இறந்துள்ளார். அதற்குள் இப்படியொரு கொலை நடந்துள்ளது. சவீதாவின் கணவர் ஒரு டாக்ஸி டிரைவர்.

அவர் வெளியே சென்றிருந்தபோது இக்குற்றத்தை சவீதா செய்துள்ளார் என்று குறிப்பிடுகிறார். இப்போது சிறையில் சவீதா அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 1682 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே