மொகமட் சிராஜ் அணியில்: டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்

இந்திய அணி: ரோகித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, பந்த், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அஸ்வின், இஷாந்த் சர்மா, மொகமட் சிராஜ்.

அகமதாபாத்தில் 4வது டெஸ்ட் போட்டி நடக்கவிருக்கிறது, இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் ஆஃப் ஸ்பின்னர் டாம் பெஸ் அணிக்கு வந்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார். பிராட் இல்லை.

இங்கிலாந்து அணி வருமாறு: டாம் சிப்லி, ஜாக் கிராலி, பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், பென் ஃபோக்ஸ், டேன் லாரன்ஸ், டாம் பெஸ், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்திய அணி: ரோகித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, பந்த், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அஸ்வின், இஷாந்த் சர்மா, மொகமட் சிராஜ்.

பிட்சைப் பொறுத்தவரை கடந்த டெஸ்ட் பிட்ச் போல்தான் இருக்கும், எப்போது முதல் பந்துகள் திரும்பும் என்பதுதான் கேள்வி, முதல் ஓரிரு ஓவர்களிலேயே திரும்பத் தொடங்கினால் இங்கிலாந்துக்கு மீண்டும் கடினம்தான்.

இந்திய அணியும் ஸ்பின் பவுலிங்கை வரவர மிக மோசமாக ஆடுகிறது.

கடந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்து இங்கிலாந்து 112 ரன்களுக்குக் காலியானது. இந்த முறை பிட்ச் கொஞ்சம் பெட்டர் என்று தீப் தாஸ் குப்தா கூறுகிறார்,

ஆனால் கிரேம் ஸ்வான், அகர்கர் ஆகியோர் 3வது டெஸ்ட் பிட்சுக்கும் இதற்கு வித்தியாசம் இல்லை என்கிறர். ஒரு முனை அதாவது ரிலையன்ஸ் முனையில் பந்துகள் கண்டபடி திரும்பும் என்று கூறப்படுகிறது, ஆட்டம் தொடங்கிய பிறகே சொல்ல முடியும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே