தேர்தல் பரப்புரையை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..!!

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வாஷ் அவுட் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி  வருகின்றன.

இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

முதல் பிரச்சாரத்தை  திருவாரூரில் தொடங்கிய மு.க.ஸ்டாலின், திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி  வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார்.

முதல்வர் வேட்பாளராக திருவாரூர் வந்திருக்கிறேன். திருவாரூரை தனி மாவட்டமாக அறிவித்தவர் கலைஞர்.திமுக ஆட்சியில் திருவாரூரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 

சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உள்ளது.  அதிமுக கூட்டணி வாஷ் அவுட் ஆகும் என்றார்.

பழனிசாமிக்கு முதல்வர் பதவி வழங்கியதால், ஓ.பி.எஸ் ஆத்திரமாக உள்ளார். ஆறுமுகசாமி  ஆணையத்தின் விசாரணை நிலை என்ன? ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு காட்டுவேன்.

மக்கள் வழங்கிய மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால்  கோட்டைக்குள் வந்து கேட்கலாம் என்றார்.

முதல்வரின் சம்பந்திக்கே நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விடப்பட்டுள்ளது. முதல்வரின் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3000 கோடி டெண்டர் முறைகேடு நடைபெற்றுள்ளது.

முறைக்கேடு தொடர்பான சிபிஐ விசாரணைக்கு அஞ்சுகிறார் பழனிசாமி.  கொரோனா காலத்தில் ஆளுங்கட்சியை போல் செயல்பட்டது திமுக.

கொரோனா காலத்தில் கொள்ளையடித்தது பழனிசாமி ஆட்சி. சசிகலா காலடியில் ஊர்ந்து சென்று முதல்வர் பதவியை வாங்கினார் எடப்பாடி பழனிசாமி.

திமுகவின் வாக்குறுதிகளை அப்படியை காப்பியடித்துள்ளது அதிமுக. திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் அடித்து அதிமுக வெளியிட்டுள்ளது.

பொய் வாக்குறுதிகளை அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். ஆட்சிக்கு  வரமாட்டோம் என்ற நம்பிக்கையில் அதிமுக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே