உள்நாட்டு, சர்வதேச விமான பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டம்?..

கொரோனா பாதிப்பு காரணமாக பெரும் இழப்பை சந்தித்துள்ள விமானத்துறையை மீட்கும் விதமாக விமான பயணர் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக எல்லாத்துறைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இதனால் பணியாளர் நீக்கம், சம்பளம் குறைப்பு என நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணிகளுக்கு விதிக்கப்படும் விமான பயணர் கட்டணத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உயர்த்தியுள்ளது.

கட்டண உயர்வு வரும் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதாவது உள்நாட்டு பயணிகளுக்கு விதிக்கப்படும் விமான பயணர் கட்டணம் ரூ.150இல் இருந்து ரூ.160ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு பயணிகளிடம் வசூலிக்கப்படும் விமான பயணர் கட்டணம் 4.85 டாலரிலிருந்து 5.2 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.

விமான பயணர் கட்டணம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிக்கெட்டோடு வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே