மினி கிளினிக்குகள் இன்று திறப்பு.. சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்..

சாதாரண காய்ச்சல், தலைவலி, உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு சிகிச்சை எளிதாக அளிக்கும் நோக்கில் தமிழக அரசு மின் கிளனிக் திட்டத்தை கடந்த செப்டம்பரில் அறிவித்தது. இந்நிலையில், இத்திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் தொடக்கப்படும் மினி கிளினிக்களில், சென்னையில் மட்டும் 200 இடங்களில் அமையவுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் ராயபுரம், மயிலாப்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட 20 இடங்களில் செயல்படும் மினி கிளினிக், படிப்படியாக மற்ற இடங்களில் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பகுதி மக்களுக்கும் மருத்துவ சேவை எளிதாக கிடைக்கும் வகையில் ஒரு கிளினிக்கில் தலா ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் உதவியாளர் இடம்பெறுவர். இந்த சேவைக்காக புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களை அரசு பணிக்கு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News Source : News18 Tamil

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே