சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று 5879 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 251738 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஆளுநர் மாளிகையில் வேகமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஆளுநர் மாளிகையில் கடந்த வாரம் சிலருக்கு கொரோனா ஏற்பட்டது.
அதன்பின் நேற்றும் நேற்று முதல் நாளும் மேலும் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழக ஆளுநர் மாளிகையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் இந்த முடிவை எடுத்து இருந்தார்.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் வரிசையாக பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக ஆளுநர் சோதனை செய்து வருகிறார்.