தமிழகத்தில் புதிதாக 5,892 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.3, வியாழக் கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 92 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,892 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 5,855. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 37 பேர்.

சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 988 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்த பாதிப்பு 4,45,851 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய செய்திக் குறிப்பில், மேலும் 92 பேர் (அரசு மருத்துவமனை-58, தனியார் மருத்துவமனை -34) உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை 7,608 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஒரேநாளில் 6,110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 3,86,173 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 52,070 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரேநாளில் அதிகபட்சமாக 82,901 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 50,47,042 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கரோனா பரிசோதனைக்காக அரசு ஆய்வகங்கள் 64, தனியார் ஆய்வகங்கள் 90 என மொத்தம் 154 பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே