உடைத்த கோதுமையில் வெஜிடபிள் உப்புமா ட்ரை பண்ணிப்பாருங்க

வெஜிடபிள் தலியா மிகவும் சிம்பிளான ஹெல்தியான உணவுகளில் ஒன்று. உடைத்த கோதுமையுடன் காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் கிச்சடி தான் அது. இதில் கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக இருக்கிறது. இந்த வெஜிடபிள் தலியா செய்வது ரொம்ப ஈஸி மேலும் இதில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் ஹெல்தியாக ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு சிறந்த தேர்வாகும். எனவே இந்த சுவையான வெஜிடபிள் கோதுமை கிச்சடியை எப்படி எளிதாக செய்யலாம் என்பதைப் பற்றி இங்கே தெரிஞ்சுக்கலாம் வாங்க.
பிரதான உணவு
1 கப் நறுக்கிய பூக்கோசு
1 கப் துண்டுகளாக்கி கேரட்
1 கப் பட்டாணி
1 கப் நறுக்கிய குடை மிளகாய்
1 கப் நறுக்கிய தக்காளி
1 கப் நறுக்கிய வெங்காயம்
1 கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலை
தேவையான அளவு மஞ்சள்
தேவையான அளவு சிவப்பு மிளகாய்
தேவையான அளவு வறுத்த சீரக விதைகள்
தேவையான அளவு ஹிமாலயன் உப்பு
2 தேக்கரண்டி நெய்
2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
முக்கிய பொருட்கள்
1 கப் உடைந்த கோதுமை
How to make: உடைத்த கோதுமையில் வெஜிடபிள் உப்புமா ட்ரை பண்ணிப்பாருங்க
Step 1:
ஒரு பானில் நெய் சேர்த்து கொள்ளவும். நெய் சூடானதும் அதில் உடைத்த கோதுமையை சேர்க்கவும். இதற்கு தலியா என்றும் பெயர் உண்டு. கோதுமையை 3 முதல் 4 நிமிடங்கள் வறுத்துக் கொள்ளுங்கள்.
Step 2:
ஒரு பானில் உப்பையும் தண்ணீரையும் சேர்க்கவும். கோதுமை மற்றும் தண்ணீரின் அளவு 3:1 ஆக இருக்க வேண்டும். குக்கரில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் குக்கர் மூடியை போட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
Step 3:
ஒரு பானில் நெய் விட்டு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இப்போது இதில் காலிஃப்ளவர், கேரட் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டுக் கொள்ளவும். அதில் பட்டாணியும் தக்காளியும் சேர்த்து குக்கரின் வெயிட் போட்டு மூடி தக்காளி மற்றும் காய்கறிகளின் பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும்.
Step 4:
அதில் கடைசியாக குடை மிளகாயும் மஞ்சள் தூளும் சேர்த்து அதில் சீரகமும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
Step 5:
இப்போது குக்கரிலிருந்து தலியாவை எடுத்து அதில் காய்கறிகளைச் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும். எல்லா பொருட்களையும் கலந்த பிறகு ஹை ஃப்ளேமில் வைத்து ஒரு நிமிடம் வேகவைக்கவும். ஹெல்த்தியான உடைத்த கோதுமை வெஜிடபிள் கிச்சடி ரெடி.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே