தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் பணி நேற்றோடு முடிந்தது.

இன்று காலை முதல் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யும் பணி தொடங்கியிருக்கிறது.

மனுவில் சொத்து விவரங்களையும், குற்ற விவரங்களையும் முறையாக குறிப்பிடாத வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது.

அந்த வகையில், குற்ற விவரங்களை முறையாக குறிப்பிடாத காரணத்தால் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலையின் மனு நிறுத்திவைக்கப்பட்டது.

அதே போல, வருமான வரி தொடர்பான ஆவணங்களில் விளக்கம் கேட்டு அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்பு மனுவும் நெல்லையில் அமமுக சார்பில் போட்டியிடும் பால்பாண்டியனின் மனுவும் நிறுத்திவைக்கப்பட்டது. 

அந்த வகையில் தற்போது மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் மநீம வேட்பாளரான பத்ம பிரியாவின் மனுவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் இளம் பெண் வேட்பாளர் இவர்.

சமூக வலைதளங்களிலும் வெகுவாக அறியப்படுபவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கையில் டார்ச் லைட்டுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதற்கான ரூ.10 ஆயிரம் பணத்தை மறந்து விட்டு சென்ற பத்ம பிரியா, அவரது உதவியாளர் உதவிய பிறகே மனுத் தாக்கல் செய்தார். இந்த சூழலில், அவரது மனு நிறுத்திவைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே