கமல் இன்னும் வளரவில்லை; ‘அப்பு’ கமலாகவே இருக்கிறார் – வைகைச்செல்வன் விமர்சனம்..!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி அமைக்காத கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

சட்டமன்றத் தேர்தலை முதன்முறையாக எதிர்கொள்ளவிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டணி மற்றும் களப்பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் கழகங்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மேலும், 3ஆவது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு வந்து விட்டதாகவும், மக்களுடனே எங்கள் கூட்டணி என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கமலின் இந்த அறிவிப்பு குறித்து விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கழகங்களோடு கூட்டணி இல்லை என்கிறார் கமல்.

கூட்டணி வைக்கிற அளவிற்கு கமல் இன்னும் வளரவில்லை. இன்னும் ‘அப்பு’ கமலாகவே இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே