ஸ்டெர்லைட் ஆலை வழக்கின் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி – கமல்ஹாசன்

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த தடை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்திருக்கும் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிர்வாகம் தரப்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் பிறப்பித்த உத்தரவில், ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுடி செய்து ஆலையைத் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என தீர்ப்பளித்தனர்.

இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் கமல்ஹாசன், “ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி.

இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான்.

மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.” என்று தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே