நடிகர் சூரி வழக்கில் இருந்து நீதிபதி விலகல்..!!

சென்னையை அடுத்து சிறுசேரி அருகே நிலம் வாங்கித்தருவதாக 2.7 கோடி மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணுவின் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல்ராஜன் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, அன்புவேல்ராஜன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி இருக்கிறார்கள்.

இந்நிலையில், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு பரிந்துரைத்திருக்கிறார் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா.

சூரியின் வழக்கில் இருந்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விலகியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே