தமிழிலும் JEE தேர்வுகள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு..!!

JEE தேர்வு இனி வரும் காலத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர பிற மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு, இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் நடைபெறுகிறது.

ஆனால், IIT மற்றும் NIT உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் JEE நுழைவுத் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், JEE மெயின் மற்றும் JEE அட்வான்ஸ்டு தேர்வுகள் இனி இந்தி, ஆங்கிலம் மொழிகளுடன் பிற மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

தாய்மொழியில் தேர்வுகளை எழுதினால் தான் அதிக மதிப்பெண்களைப் பெற்று சாதிக்க முடியும் என்று பிரதமர் மோடியின் அறிவுறுத்தலையடுத்து JEE தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைவார்கள் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே